கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் பாடல் வரிகள்

Movie Name
Thalaivanukkor Thalaivi (1989) (தலைவனுக்கோர் தலைவி)
Music
Dr. Balamurali Krishna
Year
1989
Singers
Dr. Balamuralikrishna
Lyrics
Vaali
கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல்
சின்னக் கிளிகள் ரெண்டு தவிக்குதிங்கே திசை புரியாமல்
கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல்
சின்னக் கிளிகள் ரெண்டு தவிக்குதிங்கே திசை புரியாமல்
இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா

தலைவனுக்கோர் தலைவியென்னும் தத்துவத்தைக் கண்டு
தன் தேசம் விட்டு தேசம் வந்த தோகை மயில் ஒன்று
வேடந்தாங்கல் என நினைத்த வீட்டினிலே இன்று
ஒரு வேடன் வந்து வில்லெடுக்க வாடுதம்மா நின்று
இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா...

பெற்றவர்கள் பெரியவர்கள் பார்த்து வைத்த பொருத்தம்
பூ முடித்த பாவைக்கும்தான் நேர்ந்ததம்மா வருத்தம்
தாரம் விட்டு வேறொருவன் தாரத்தின் மேல் சபலம் வைத்த
தலைவனுடன் வாழ்வது தான் தாங்கவொண்ணா நரகம்
இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா

யார் யார்க்கு வாய்ப்பதென்ன யாரறிவார் இங்கே
அவன் போட்ட கணக்கு என்றால் போட்டவன்தான் எங்கே
நதி வழியே [போனால்தான் கரை சேரும் ஓடம்
விதி வழியே போகுமென்றால் வழி மாறக் கூடும்
இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.