Song lyrics

Aarathi Kannukkulla Lyrics

ஆராத்தி கண்ணுக்குள்ள பாடல் வரிகள்

Last updated Nov 04, 2026

Music
D. Imman
Year
2026
Singers
D. Imman
Lyricist
Karthik Netha

Lyrics

Aarathi Kannukkulla Lyrics

ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற
ஆ கட்டி நின்ன என்ன தாலாட்டுற
சொட்ட சொட்ட நனைஞ்சேனே ஏய்
சொக்கி சொக்கி கரைஞ்சேனே ஏய்

பூமாரி தூவையில நீ பாக்குற
பூ போட்ட கண்ணுக்குள்ள பூ பூக்குற
சொட்ட சொட்ட நனைஞ்சேனே ஏய்
சொக்கி சொக்கி கரைஞ்சேனே ஏய்

இதமா நீ பாக்க எச படிக்குது மனசே
வரமா நீ நீட்ட சிலு சிலுக்குது உசுரே
சொட்ட சொட்ட நனைஞ்சேனே ஏய்
சொக்கி சொக்கி கரைஞ்சேனே ஏய்

ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற
ஆ கட்டி நின்ன என்ன தாலாட்டுற

ஒத்தையா வந்தவன்
உன்ன கண்டு உருகி சிரிக்கிறேன்
சொத்தையா நின்னவன்
சொந்தம் ஒன்ன மழையில் ரசிக்கிறேன்

அத்துகிட்ட ஆடு நானடி
அன்ப அள்ளி கொடுக்குற
மச்சம் இல்லா ஆளு தானடி
புதையலா கிடைக்குற

வேற யாரும் கேட்காத
எச நானடி
என நீ கேட்டு
தலை ஆட்டுற

ஊர் யாரும் சீண்டாத
வெறும் ஆள நீ
அடி தாயாட்டம்
மடி ஏந்துற

பாத ஒன்னு கண்ணு முன்னே தெரியுதடி

ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற
ஆ கட்டி நின்ன என்ன தாலாட்டுற
சொட்ட சொட்ட நனைஞ்சேனே ஏய்
சொக்கி சொக்கி கரைஞ்சேனே ஏய்

இதமா நீ பாக்க எச படிக்குது மனசே
வரமா நீ நீட்ட சிலு சிலுக்குது உசுரே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people