விண்வெளி நாயகா பாடல் வரிகள்

Last Updated: Jan 17, 2026

Movie Name
Thug Life (2025) (தக் லைப்)
Music
A. R. Rahman
Year
2025
Singers
A. R. Ameen, Shruti Haasan
Lyrics
Karthik Netha
விண்வெளி நாயகா விடியல் வீரா
உயிரின் மேலே விருந்திட வா வா
வா வா வா வா வா வா
விண்வெளி நாயகா விடியல் வீரா
உயிரின் மேலே விருந்திட வா வா
வா வா வா வா வா வா
அழகிய நாயகா அருகில் நீ வா
இசையை போலே இனித்திட வா வா
வா வா வா வா வா வா

அருவி நீ ..மௌனம் நீ
கலைகள் நீ ..நீ என் பிழை நீ
கவனம் நீ…. சலனம் நீ
முழுமை நீ …நீ என் பொன் சுமை நீ
அளவில்லா சுவை நீ
எனது முடி முதல் அடி வரை
அழகிய அலை அலை
இறைவனை தழுவிடும் மனநிலை

அன்றொரு நாளிலே அலையின் மேலே
அலையை போன்றே கலந்து இருந்தோமே
கள்வரின் இரவிலே கனவின் உள்ளே
கனவை போலே விழித்து இருந்தோமே
தொலைந்த நேரமே கரைந்து பூக்கவே
திறந்து வா வா வா மாதவா வா

கனவில் நான் தொலைவில் நீ
பொழுதெல்லாம் தீ தேன் சிறகே
இருந்தும் நான் ரசிக்கிறேன்
நினைவெல்லாம் உன் …உன் மென் குரலே
திரும்பி வா விடியலே
உனது இரு விழி இமை வழி
அது தரும் ஒரு மொழி
விழி வழி பெரும் மொழி முகவரி

விண்வெளி நாயகா விடியல் வீரா
உயிரின் மேலே விருந்திட வா வா
அழகிய நாயகா அருகில் நீ வா
இசையை போலே இனித்திட வா வா
தொலைந்த நேரமே கரைந்து பூக்கவே
திறந்து வா வா வா மாதவா வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.