Vaana Villena Vandhu Lyrics
வானவில்லென வந்து காதலின் பாடல் வரிகள்
Last Updated: Jul 16, 2026
Movie Name
Aasai Magan (1953) (ஆசை மகன்)
Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
Jikki
Lyrics
Kuyilan
வானவில்லென வந்து காதலின்
வர்ண ஜாலங்கள் காட்டினாய்
மாசில்லாத என் உள்ள வீணையில்
மௌன கீதங்கள் மீட்டினாய்
வாழ்வின் ஆனந்தப் பொன் மூலைகளில்
வந்து பேரொளி வீசினாய்
வாழ்க நீ எந்தன் உள்ளக் கோயிலில்
வாழ்க வாழ்க நீ என்றுமே...
வான வீதியில் ஓடும் மேகங்கள்
வர்ண வில்லினை மூடுமோ
மாசில்லாத என் உள்ளக் கோட்டைகள்
மண்ணில் விழுந்து மண்ணாகுமோ
தேனில் தோய்ந்தெழும் எந்தன் ஆசைகள்
தேய்ந்து மாய்ந்திடும் காலமோ
தீருமோ துயர் மாறுமோ
அறியாது என் மனம் ஏங்குதே