Rajave Nalla Rojavai Paar Lyrics
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Aasai Magan (1953) (ஆசை மகன்)
Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
P. Leela
Lyrics
Kuyilan
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கெ காத்திருக்கு
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
வாசமுள்ளது என்ற போதிலும்
வண்டு தொட்டது இல்லையே
ஆசையுள்ளது என்ற போதிலும்
யாரும் தொட்டது இல்லையே
நேசமுள்ள சீமான் உன் நினைவாலே
தேடுதே நீங்காது தேனூறுதே......(ராஜாவே)
பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
தனியாக ஏங்குது பாராயிங்கே
பூ வேண்டுமா இதழ்தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா இதில்
ஏது வேண்டும் சொல்வாயே......(ராஜாவே)