Kalaigal Migundha Engal Lyrics
கலைகள் மிகுந்த எங்கள் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Aasai Magan (1953) (ஆசை மகன்)
Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
M. L. Vasanthakumari, P. Leela
Lyrics
Kuyilan
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே – என்றும்
நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை (கலை)
அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்
இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும் (கலை)
கரும்பான காவியம் கம்பனின் பாடலே – தேன்
வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே..
கரும்பான காவியம் கம்பனின் பாடலே..
வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி
உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி
தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த
ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய (கலைகள்)