யார் கங்கை பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Nerungi Vaa Muthamidathe (2014) (நெருங்கி வா முத்தமிடாதே)
Music
Madley Blues
Year
2014
Singers
Nandini Srikar
Lyrics
Na. Muthukumar
யார் கங்கை இதில்
பாவ அழுக்கின்
சுமை வைத்தது
யார் கண்கள் இதில்
ஈரம் கசிய
தீ வைத்தது
யார் நெஞ்சம் இதை
ஐயோ
அழ வைத்தது
விதியதன் கைகளில்
நூல் பொம்மை நாம்
முடியும் வரை
ஆட்டமிடு
விடியும் வரை
வாழ்வோம் இங்கு

வெள்ளை தாளைப் போலே
வாழ்க்கை என்றும்
இருந்து விட்டால்
வண்ணமில்லை
துன்பம் இன்றி
இன்பம் இல்லை நெஞ்சே
தவறு இன்றி
பாடம் இல்லை
வழிகளிலே
வளைந்தாலென்ன
நதியனைத்தும்
கடல் சேருமே
விதியதன் கைகளில்
நூல் பொம்மை நாம்
முடியும் வரை
ஆட்டமுண்டு
விடியும் வரை
வாழ்வோம் இங்கு
வருத்தமென்ன
இளங்கிளியே
யார் கங்கை இதில்
பாவ அழுக்கின்
சுமை வைத்தது
யார் கண்கள் இதில்
ஈரம் கசிய
தீ வைத்தது
யார் நெஞ்சம் இதை
ஐயோ
அழ வைத்தது
விதியதன் கைகளில்
நூல் பொம்மை நாம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.