Chapter 103

குடிசெயல் வகை

Kutiseyalvakai

The Way of Maintaining the Family

10 kurals

Kural 1021 கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
No greatness is grander like Saying "I shall work without slack"
Kural 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
These two exalt a noble home Ardent effort and ripe wisdom
Kural 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
When one resolves to raise his race Loin girt up God leads his ways
Kural 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
Who raise their races with ceaseless pain No need for plan; their ends will gain
Kural 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
Who keeps his house without a blame People around, his kinship claim
Kural 1026 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
Who raise their race which gave them birth Are deemed as men of manly worth
Kural 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
Like dauntless heroes in battle field The home-burden rests on the bold
Kural 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
No season have they who raise their race Sloth and pride will honour efface
Kural 1029 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
Is not his frame a vase for woes Who from mishaps shields his house?
Kural 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
A house will fall by a mishap With no good man to prop it up