Chapter 106

இரவு

Iravu

Mendicancy

10 kurals

Kural 1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
Demand from those who can supply Default is theirs when they deny
Kural 1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Even demand becomes a joy When the things comes without annoy
Kural 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
Request has charm form open hearts Who know the duty on their part
Kural 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
Like giving even asking seems From those who hide not even in dreams
Kural 1055 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
The needy demand for help because The world has men who don't refuse
Kural 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
The pain of poverty shall die Before the free who don't deny
Kural 1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
When givers without scorn impart A thrill of delight fills the heart
Kural 1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
This grand cool world shall move to and fro Sans Askers like a puppet show
Kural 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
Where stands the glory of givers Without obligation seekers?
Kural 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
The needy should not scowl at "No" His need another's need must show * Saint valluvar talks of two kinds of Asking:() Asking help for public causes or enterprises () Begging when one is able to work and this is condemned