Chapter 121

நினைந்தவர் புலம்பல்

Ninaindhavarpulampal

Sad Memories

10 kurals

Kural 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
Love is sweeter than wine; for vast Is its delight at very thought
Kural 1202 எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
Pains are off at the lover's thought In all aspects this love is sweet
Kural 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
To sneeze I tried hence but could not Me he tried to think but did not
Kural 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
Have I a place within his heart? Ah from mine he will never depart
Kural 1205 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
Shame! My heart often he enters Banning me entry into his
Kural 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன்.
Beyond the thought of life with him What else of life can I presume?
Kural 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
What will happen if I forget When his memory burns my heart?
Kural 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
I bring him to ceaseless memory He chides not; and thus honours me
Kural 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
Dear life ebbs away by thought Of him who said we are one heart
Kural 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
Hail moon! Set not so that I find Him who left me but not my mind