Chapter 125

நெஞ்சொடு கிளத்தல்

Nenjotukilaththal

Soliloquy

10 kurals

Kural 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
Think of, O heart, some remedy To cure this chronic malady
Kural 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
Bless O mind! you pine in vain For me he has no love serene
Kural 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity
Kural 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out
Kural 1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?
Kural 1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
Wrath is false, O heart, face-to face Sans huff, you rush to his sweet embrace
Kural 1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
Off with love O mind, or shame I cannot endure both of them
Kural 1248 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
Without pity he would depart! You sigh and seek his favour, poor heart!
Kural 1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
The lover lives in Self you know; Whom you think, mind to whom you go?
Kural 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
Without a thought he deserted us To think of him will make us worse