Chapter 35

துறவு

Thuravu

Renunciation

10 kurals

Kural 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
From what from what a man is free From that, from that his torments flee
Kural 342 வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
Give up all to gain the True And endless joys shall hence seek you
Kural 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
Curb the senses five and renounce The carving desires all at once
Kural 344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
To have nothing is law of vows Having the least deludes and snares
Kural 345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
Why add to bonds while this body Is too much for saints to be birth-free
Kural 346 யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain
Kural 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு.
Grief clings on and on to those Who cling to bonds without release
Kural 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
Who renounce all are free from care Others suffer delusive snare
Kural 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
Bondage cut off, rebirth is off The world then seems instable stuff
Kural 350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon