Chapter 84

பேதைமை

Pedhaimai

Folly

10 kurals

Kural 831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
This is folly's prominent vein To favour loss and forego gain
Kural 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
Folly of follies is to lead A lewd and lawless life so bad
Kural 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness
Kural 834 ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns
Kural 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
The fool suffers seven fold hells In single birth of hellish ills
Kural 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
A know-nothing fool daring a deed Not only fails but feels fettered
Kural 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast
Kural 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
Fools possessing something on hand Like dazed and drunken stupids stand
Kural 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
Friendship with fools is highly sweet For without a groan we part
Kural 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet