Chapter 87

பகை மாட்சி

Pakaimaatchi

The Might of Hatred

10 kurals

Kural 861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
Turn from strife with foes too strong With the feeble for battle long
Kural 862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong?
Kural 863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit
Kural 864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
The wrathful restive man is prey To any, anywhere any day
Kural 865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease
Kural 866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
Blind in rage and mad in lust To have his hatred is but just
Kural 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
Pay and buy his enmity Who muddles chance with oddity
Kural 868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
With no virtue but full of vice He loses friends and delights foes
Kural 869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
The joy of heroes knows no bounds When timid fools are opponents
Kural 870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
Glory's light he will not gain Who fails to fight a fool and win