எல்லாம் கடந்து போகுமடா பாடல் வரிகள்

Movie Name
Soodhu Kavvum (2013) (சூது கவ்வும்)
Music
Santhosh Narayanan
Year
2013
Singers
Koavai Jaleel
Lyrics
Nalan Kumarasamy
எல்லாம் கடந்து போகுமடா..
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா...

எல்லாம் கடந்து போகுமடா...
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா...
தடைகள் ஆயிரம் வந்தாலும்,
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம் ஒஹ்ஹோ..

செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பல் இன்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என்ன உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்...

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை எண்ணி அச்சம் இல்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி வெற்றி நிச்சயம்...

எல்லாம் கடந்து போகுமடா...
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா...

இரவும் பகலும் இல்லை என்றால்
ஒரு நாள் இங்கு முடிந்திடுமா..?
நிலவை கையால் மூடிவிட்டால்
அதன் ஒளி தான் குறைந்திடுமா..?

வாழ்க்கை ஒரு வட்டம்
கோள்வி கேட்பதொரு ஒரு குற்றம்
விடையரிந்து விட்டால்
புவி தாங்காதடா
கண் தூங்காதடா, தம்பி.....

எல்லாம் கடந்து போகுமடா...
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா..
தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்...

எல்லாம் கடந்து போகுமடா...
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா..... ஓ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.