Angum Ingum Lyrics
அங்கும் இங்கும் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Athisaya Penn (1959) (அதிசயபப்பெண்)
Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
T. M. Soundararajan
Lyrics
V. Seetharaman
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தனைப் பாராய்
வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டுன்
நெஞ்சம் பதறவும் இலையோ
அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோ
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இலையோ (அங்கும்)
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
நன்மை அழிய தீமை வளர
சுயநலமே உலகை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இலையோ.....( அங்கும்)