சிங்கார வேலா பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Malliyam Mangalam (1961) (மல்லியம் மங்களம்)
Music
T. A. Kalyanam
Year
1961
Singers
T. M. Soundararajan
Lyrics
V. Seetharaman

சிங்கார வேலா விளையாட வா என்னுடன்
விளையாட வா ஆ....ஆ.....ஆ...
சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே
தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே (சிங்கார)

பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே
கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை –கடைக்
கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை
பன்னீரில் நீராட்ட வா வா விரைந்து வா

குன்றாடும் குகனே செண்டாட வா ஆ.....ஆ...
மலர்ச் செண்டாட வா
குன்றாத அன்போடும் குமரா நம் நெஞ்சம்
ஒன்றாக கொஞ்சி குலாவ வா வா வா வா (சிங்கார)

தேனோடு தருவேன் தினைமாவுமே
வானோரின் அமுதின் சுவையூறும் தமிழை
வாரி நீ வழங்க நீ வா வா இங்கு வா
சிங்கார வேலா விளையாட வா என்னுடன்
விளையாட வா ஆ....ஆ.....ஆ...