Avarinri Naan Illai Penne Lyrics
அவரின்றி நானில்லை பெண்ணே பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
அவரின்றி நானில்லை பெண்ணே
அவர் அடைகின்ற சுகமே
என் தவமாகும் கண்ணே
அவரின்றி நானில்லை பெண்ணே...(அவரின்றி)
கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே
பெண்கள் மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்
மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்
அவரின்றி நானில்லை பெண்ணே....
கண்ணாளன் இதயம் துயர் காணும் போது
கனிவாக பேசி சுகமூட்டும் மாது என்
கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது ஆ...ஆ...
இன்பம் வேறேது வாழ்வில் இன்பம் வேறேது
என் வாழ்வில் அவரின்றி நானில்லை பெண்ணே
அணியாலே வரும் இன்பம் நிலையாதது – ஆடை
அணியாலே வரும் இன்பம் நிலையாதது – அவர்
அன்பாலே தரும் இன்பம் அழியாதது
குணம் மேவும் மணவாளன் மனம் போலவே
பணி செய்து வாழ்வின் பலன் காண்பதே
குல மங்கையார் செய்த பெரும் பாக்கியமே (அவரின்றி)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.