சுந்தர கண்ணு இந்திரலோகம் பாடல் வரிகள்

Movie Name
Malliyam Mangalam (1961) (மல்லியம் மங்களம்)
Music
T. A. Kalyanam
Year
1961
Singers
K. Jamuna Rani
Lyrics
M. K. Athamanathan

சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது

அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை
ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே
வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க அத
மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க.....(சுந்தர)

அந்தரத்திலே இருந்து இறங்கி இங்கு சுந்தரமாய்
ஆட வந்து ஜாடை செய்யும் ரம்பா
காதல் மந்திரங்களை மொழிந்து
தந்திரங்களை புரிந்து வந்து நீ மயக்கிவிட வம்பா

மை டியர் மாலி லைப்பில ஜாலி
வந்த பின்னே இங்கு என்ன ஜோலி
ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு
அப்பாவுக்கு லூசான நட்டு
டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு மை காட்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.