நாடோடி மன்னா பாடல் வரிகள்

Movie Name
Endrendrum Kadhal (1999) (என்றென்றும் காதல்)
Music
Manoj Bhatnagar
Year
1999
Singers
K. S. Chithra, P. Unnikrishnan, S. A. Rajkumar
Lyrics
நாடோடி மன்னா போகதே
நீரின்றி மீனும் வாழாதே
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

போகாதே நாடோடி நண்பா போகாதே
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே

போகாதே நாடோடி நண்பா போகாதே
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே

நாடோடி நண்பன் போகாதே

என்றென்றும் காதல் மாறாதே

உடல் மட்டும் தானே கடல் விட்டு தாண்டும்
நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும்
பகல் வந்த போது இருள் எங்கு போகும்
இருள் வந்த போது நிழல் எங்கு போகும்
எம் இமைகள் இங்கு மூடாமல் உன் விழிகள் அங்கே தூங்காதே
நீ மறந்தே தூங்கி போனாலும் நான் கனவில் வருவேன் அப்போதே
கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம் உயிரில் ஊஞ்சல் ஆடு

இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும்
என் தேசக்காற்றும் வாடாதோ என் சுவாசம் தன்னை தேடாதோ
அடி காதல் கொண்ட ரோஜாவே என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ

வார்த்தைகள் வேண்டாம் வார்த்தைகள் வேண்டாம் மௌனத்தினாலே பேசு

இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

போகாதே நாடோடி நண்பா போகாதே
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே

போகாதே நாடோடி நண்பா போகாதே
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே

நாடோடி மன்னா போகதே
என்றென்றும் காதல் மாறாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.