கண்களா மின்னலா பாடல் வரிகள்

Movie Name
Endrendrum Kadhal (1999) (என்றென்றும் காதல்)
Music
Manoj Bhatnagar
Year
1999
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ தந்ததாலா

காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா இந்த சந்தோசம் நீ வந்ததாலா

வெண்ணிலா
ஹோ என்னோடு தான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய்
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா

 காதலா

ரோஜாப்பூ தேகத்தில் தாழம்பூ வாசங்கள் நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தில் சூடான தேனுக்கு நான் ஏங்கி நின்றேனடி

தொட்டாலும் தாளாமல் விட்டாலும் போகாமல் தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமே முத்துக்கள் என்றாக நான் கோர்ப்பேன் முத்து மணி

உன்னை தாயாக்கி தாலாட்டுவேனே கண்மணி

ஹோ ஹோ மௌனமே பாடலா ஆனதே காதலா இந்த சந்தோசம் நீ தந்ததாலா

ஹோ வெண்ணிலா
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா

காதலா

இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

இது காதல் ஆரம்பம்

இது காதல் ஆரம்பம்

ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில் மூச்சுக்கு திண்டாடினேன்
வீழ்கின்ற வேகத்தில் தீப்பற்றிக்கொள்கின்ற விண்மீனை போல் ஆகினேன்

காமன் தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள் எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம்போல் எந்நாளும் நான் ஏங்கினேன்

இது எப்போதும் தீராத தாகம் காதலா

கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா

காதலா
ஹோ ஹோ மௌனமே பாடலா ஆனதே காதலா இந்த சந்தோசம் நீ தந்ததாலா

வெண்ணிலா

ஹோ என்னோடு தான் நான் இல்லையே

கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய்
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா

காதலா
வெண்ணிலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.