உலகெல்லாம் ஒரு பாடல் வரிகள்

Movie Name
Endrendrum Kadhal (1999) (என்றென்றும் காதல்)
Music
Manoj Bhatnagar
Year
1999
Singers
Hariharan
Lyrics
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
கற்காலம் தொடங்கி கம்பியூட்டர் வரையில்
கற்காலம் தொடங்கி இன்டர்நெட் வரையில்
அன்றும் இன்றும் என்றென்றும் காதல்
எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
ஹே ஹே எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்

உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்

பூமியோடு காதல் மழை சிந்தும் நீருக்கு
பூக்களோடு காதல் வழி போகும் காற்றுக்கு
காலம் மீது காதல் கடிகார முள்ளுக்கு
கம்பன் மீது காதல் தமிழ் கண்ட சொல்லுக்கு
நதி வளைந்து போவது எல்லாம் கரை மீது கொண்ட காதல்
ஆண் குனிந்து போவது எல்லாம் பெண்னோடு கொண்ட காதல்

எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
ஹே ஹே எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்

உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்

பிள்ளை மீது காதல் அட பெற்ற அன்னைக்கு
பொம்மையோடு காதல் விளையாடும் பிள்ளைக்கு
காதல் இல்லையென்றால் நம் சாமி வாழாது
பூமி மட்டும் சுற்றும் அட பூக்கள் இல்லாது
கார்காலம் ஒன்று வந்தால் அட கம்பளி மீது காதல்
பதினேழு வயது வந்தால் காதல் மீது காதல்
எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
ஹே ஹே எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
என்றென்றும் காதல் என்றென்றும் காதல்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.