யாவும் யாவுமே நீயானாய் பாடல் வரிகள்

Movie Name
Thamezharasan (2020) (தமிழரசன்)
Music
Vijay Antony
Year
2020
Singers
V. V. Prasanna, Vibhavari Apte-Joshi
Lyrics
ARP. Jayaraam
யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய்
ராதை வந்ததாலா

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா

என்னில் வேறு…….
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா……
மொத்த வாழ்க்கையே
சுகமடா…..

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா….ஹேய்……

தம் தம் இருதயம்
புதியதா
சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம்
இணைந்ததால்
பந்தம் விளைந்ததா

தாலாட்டி தலை நீவி
தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற
மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன்
வாழ்க்கையை காதலா

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா….ஹேய்…..

உலகம் தொடங்குதே உன்னிலே
பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென
என்றும் வெல்லடா

நீ ஏற என் தோள் ஏணி
வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி
தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே…

யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா

தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா…

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா…

என்னில் வேறு……
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா……
மொத்த வாழ்க்கையே
சுகமடா…..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.