பாக்குறப்போ பாக்குறப்போ பாடல் வரிகள்

Movie Name
Thamezharasan (2020) (தமிழரசன்)
Music
Vijay Antony
Year
2020
Singers
Ilaiyaraaja, Neeti Mohan
Lyrics
ARP. Jayaraam
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ

ஒருவர் போடும் ஆடைக்குள்
இருவர் போகலாம்
இருவர் போடும் ஜதிகளில்
இசையை தேடலாம்

பள்ளி கால கதைகளை
மடியில் பேசலாம்
விஷமம் செய்த விஷயங்கள்
நினைத்து மகிழலாம்

செல்ல சண்டை போடும்போது
காதல் கூடுதே
சின்ன சின்ன அன்பளிப்பில்
மையல் ஏறுதே

கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து
நோட்டம் பார்க்கிறாய்
வெப்ப மூச்சில் சூடு ஏற்றி
உருக வைக்கிறாய்

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

மலர்களும் கொண்டாடிடும்
கூடல் காலமே
பழகுகின்ற வைபவம்
காதல் பயணமே

உணர்வுகள் ஒன்றாகிடும்
இன்ப யாகமே
கலந்த அந்த அனுபவம்
காம வேதமே

இதழை தாண்டி போகும் போது
ஆசை சொல்லுவேன்
இன்ப ராகம் நீயும் மீட்ட
வீணை ஆகுவேன்

பாதி விழிகள் மூடும் அழகு
மூன்று நாள் பிறை
பாவை உடலில் பொங்கி வழியும்
காதல் நாள் மழை

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.