பொறுத்தது போதும் பொங்கிட பாடல் வரிகள்

Movie Name
Thamezharasan (2020) (தமிழரசன்)
Music
Vijay Antony
Year
2020
Singers
K. J. Yesudas
Lyrics
ARP. Jayaraam
பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

உனக்கென எனக்கென
வழியில்லையா
உலகினில் பொதுவினில்
விதியில்லையா

நீதியும் நேர்மையும்
கலங்கிடுதே
தீமையும் துரோகமும்
வலம் வருதே
தர்மமும் நியாயமும் அழுகிறதே

போதும் இது போதும்
நாம் பொறுத்தது போதும்
வேண்டும் இங்கு வேண்டும்
நமது உரிமைகள் வேண்டும்
காலம் எதிர்காலம்
நமதாகிட வேண்டும்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா…..
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….நாடென ஒரு சிலர் உடமைகளா
நதிகளும் அவருக்கு அடிமைகளா
காசுக்கு வாங்கிய ஆட்சிகளா
மக்களின் வாழ்வென்ன வறுமையிலா

குற்றத்துக்கே துணை சட்டமடா
ஏழையிடம் விளையாடுமடா
நடந்துவிட்ட
அந்த தவறுகளை
திருத்திடவே
நம்மால் முடியும்

ஒரு குரலாக முழங்கிட வா
ஒரு இனமாக இணைந்திட வா
பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி
தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா…..
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….ரத்தத்தை சிந்திடும் ஏழையிடம்
புத்தனின் போதனை எடுபடுமா
விளக்கினில் விழுந்துட்ட விட்டிலை போல்
துடித்திடும் பேருக்கு வழி வருமா
பேசுவதெல்லாம் அமைதி என்றால்
ஆயுதம் செய்வது எதற்கு இங்கே

தடை உடைத்து
தடை காத்திடுவோம்
இடை மறித்தால்
படை பெருக்கிடுவோம்

தீபத்தை நெருப்பென சொல்லாதே
நெருப்பினை தீயென தள்ளாதே
பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி
தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

உனக்கென எனக்கென
வழியில்லையா
உலகினில் பொதுவினில்
விதியில்லையா

நீதியும் நேர்மையும்
கலங்கிடுதே
தீமையும் துரோகமும்
வளம் வருதே
தர்மமும் நியாயமும் அழுகிறதே

போதும் இது போதும்
நாம் பொறுத்தது போதும்
வேண்டும் இங்கு வேண்டும்
நமது உரிமைகள் வேண்டும்
காலம் எதிர்காலம்
நமதாகிட வேண்டும்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.