மச்சான புடிசுக்கடா ஹே பாடல் வரிகள்

Movie Name
Vizhiyora Kavithai (1988) (விழியோர கவிதை)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. V. Ponnusami
Lyrics
Thirupathooran
மச்சான புடிசுக்கடா ஹே அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா
ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா

கன்னித் தீவு கோட்டை ஒண்ண புடிச்சுப்புட்டான்
கன்னித் தீவு கோட்டை ஒண்ண புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்....

ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா..

குண்டுக் கல்லு மாமன கொழவிக் கல்லா ஆக்கிட்டா
கூட்டுக்குள் பயலத்தான் பூட்டிட்டா பூட்டிட்டா
கண்டுக்காத மச்சி மச்சி காசில்லாத பஜ்ஜி பஜ்ஜி
சுண்டக்கா பயலத்தான் சுகதேவி பாத்துட்டா

என்னை யாரும் பாக்கலையே
ஹே அலையாதே அலையாதே...
ஏக்கத்தையும் தீக்கலையே
ஹே பொலம்புற பொலம்புற

தள்ளாடும் முன்னே கெடச்சிடுமா இந்த
தாம்பத்ய வாழ்க்கை நடந்திடுமா
மாதவி உனக்கும் கெடைப்பாடா
காசு பணம் அள்ளிக் கொடுப்பாடா

ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா
கன்னித் தீவு கோட்டை ஒண்ண புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்....

மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா..

ஹே குத்திக்க குத்திக்க டப்பாங்குத்து
குமரிப் பொண்ண கூட வச்சு
அத்திரி பத்தரி அப்பா டக்கர்
அடிச்சிக்கிட்டான் காதலுக்கு..

என் மச்சான் மரிக்கொழுந்து
மலையாரவுலான் செண்டு
நீ வச்ச ஒரு மொழம் பூ
இன்னும் வாடாம நிக்குதய்யா

ஹே சந்துக்கும் புந்துக்கும் மாமாவோட
சந்தைக்கு வந்த பாமா கூட
தளுக்கி மினுக்கு நடக்கும் போது
தடுக்கி விழுந்தா உதவி ஏது

அத்தான மாத்தாதடி நான் அச்சாரம் போட்டவன்டி
இந்த மச்சானின் ஆசைப்படி ஏ மயிலே நீ வா இப்படி

மஜாவாக மஸ்தானும் ஜகா வாங்கும் பொண்ணத்தான்
மை வச்சி பொய் வச்சி மாமன் வளச்சுட்டான்
காமதேன கண்டாச்சு கறக்கும் நேரம் வந்தாச்சு
கறந்துக்க கறந்துக்க காலத்த புரிஞ்சுக்க

பச்சைக்கிளி சுத்தி நிக்கணும்
ஆமாம் நிக்கணும் நிக்கணும்
பன்னீரிலே வெந்நீர் வைக்கணும்
ஆமாம் வைக்கணும் வைக்கணும்
சினிமா உலகத்த ஆளணும் டா
நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும் டா

ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா
கன்னித் தீவு கோட்டை ஒண்ண புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்....

மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா.
ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒண்ணு இருக்குதடா.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.