ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Rettai Kuzhal Thuppaki (1989) (இரட்டை குழல் துப்பாக்கி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Vani Jayaram
Lyrics
Thirupathooran
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் மனசு
உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான் ( 2 )

காதலிக்கும் கன்னியரே என்னைப் பாருங்க உங்க
காதலன்தான் தொடும்போது கவனம் வேணும்ங்க
காதலிக்கும் கன்னியரே என்னைப் பாருங்க உங்க
காதலன்தான் தொடும்போது கவனம் வேணும்ங்க

புத்தம் புது பூவுங்க பொறுப்போட நடந்துக்குங்க
தெரிஞ்சத நான் சொல்லிப்புட்டேன்
சேதி என்ன கேட்டுக்குங்க

ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் மனசு
உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்

கூடிக் கூடி நாளெல்லாம் வம்பு செஞ்சாங்க மனச
கூட்டி வச்ச கொழம்ப போல கொதிக்க வச்சாங்க
கூடிக் கூடி நாளெல்லாம் வம்பு செஞ்சாங்க மனச
கூட்டி வச்ச கொழம்ப போல கொதிக்க வச்சாங்க

நான்தான் உன் புருஷன்னு
நெனப்ப தினமும் வளர்த்துட்டான்
ஆசை வச்சப் பொண்ணத்தான்
அம்போன்னு விட்டுப்புட்டான்

ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் மனசு
உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்....

பிரிஞ்சு போன அவனத்தான் தேடி வந்தேங்க
அந்த ப்ளடி பக்கர புடிச்சு ரெண்டு போட வந்தேங்க
பிரிஞ்சு போன அவனத்தான் தேடி வந்தேங்க
அந்த ப்ளடி பக்கர புடிச்சு ரெண்டு போட வந்தேங்க

பூவும் பொண்ணும் ஒண்ணுங்க பரிதாபம் எண்ணுங்க
நான் திருந்தாத பயல்கள திருத்த வந்த பொண்ணுங்க

ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் மனசு
உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்....

ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் மனசு
உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
தானன்னா தானானா தானனன்னா தானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.