உன்னை பார்த்த நாள் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Kalathil Santhippom (2021) (களத்தில் சந்திப்போம்)
Music
Yuvan Shankar Raja
Year
2021
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Pa. Vijay
உன்னை பார்த்த நாள்
உன்னை பார்த்த நாள்
எந்தன் வாழ்விலே
நான் என்னை பார்த்த நாள்

என் ஜன்னலோர ஈர சாரலாய்
நின்று சிந்தி சென்றாய்
என்ன நானும் செய்வதோ
கொஞ்சி பேசி கொல்கிறாய்

நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா

நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா

இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன்
சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன்
நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா
விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா

உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில்
மேலும் மூச்சு வாங்கும்
உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம்
கால்கள் மேகம் தாண்டுதே

என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்

என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.