என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Chokka Thangam (2003) (சொக்கத்தங்கம்)
Music
Deva
Year
2003
Singers
Hariharan, Sadhana Sargam
Lyrics
Pa. Vijay

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற அழகே

குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமே
மந்தமாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கு

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற அழகா

குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமா
மந்தமாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு..(என்)

எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்

கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே
பத்து விரல் போதாது உன் மோகமே
லட்ச விரல் நீ கொண்டு வா வானமே
என் முத்து மணிச் சுடர்
முல்லை மலர்த் திடல் நாணுவதேன்..(என்)

முக்கனி அதில் முக்கியம் கொண்ட
முதல் கனி முதல் கனி பார்த்து விட்டேன்
பத்தினிப் பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் வேர்த்து விட்டேன்

பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது
தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது
என்னைச் சுற்றி உன் கைகள் பூ போட்டது
உன் வெள்ளை மனசிலும்
வெட்கச் சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்..(என்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.