ஊர் ஊரா போகுற மேக பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Chokka Thangam (2003) (சொக்கத்தங்கம்)
Music
Deva
Year
2003
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Snehan

ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
என் தாமரைப் பூவைக் கண்டீரோ

போன தெச புரியலையே
பொசுங்குதடி எம் மனசு
புங்கமரக் கிளை தொங்க
தூண்டுதடி என் உசுரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி (ஊர் )

பட்டா போட்டு என்னைத்தானே
பதிவாக்கி வச்சாளே பாதியிலே வீதி நிறுத்தவா
சிக்கிமுக்கி கண்ணால்தானே தீயை பற்ற வச்சாளே
தீயில் என்னை வாட்டி எடுக்கவா

அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்
நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்
அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்
சிறுக சிறுக சாகுறேனே
கண்ணம்மா மனம் கல்லாம்மா பதில் நீ கூறம்மா

செக்கிழுக்கும் மாட்டைப் போல
என்னைச் சுத்தி வந்தாயே
செக்கில் என்னை ஆட்டி பார்ப்பதேன்
ஈ எறும்ப கொன்னா கூட பாவமுன்னு சொன்னாயே
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்

என் நெஞ்சுல வாளை வீசியிருந்தா
வீர மரணம் கெடைச்சிருக்கும்
என் முதுகுல வாளை வீசியதால்
மானம் இழந்து சாகுறேனே
தாயம்மா இந்த காயம் தான் இனி ஆறாதம்மா
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...(ஊர் ஊரா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.