புதுகாதல் காலமிது பாடல் வரிகள்

Movie Name
Pudhukottaiyilirundhu Saravanan (2004) (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்)
Music
Yuvan Shankar Raja
Year
2004
Singers
Chinmayi, Ranjith
Lyrics
Snehan
புதுகாதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?

புது தேடல் படலமிது
தேகம் தேயும் தருணமிது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ?

கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன

கொடு எனையே நான் உந்தன் துணைதானே
உன் வெட்கம் என்னை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே


புதுகாதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?

புது தேடல் படலமிது
தேகம் தேயும் தருணமிது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ?

பனிமலை நடுவில் விழுந்தது போலே
உன் மடி இடையில் விழுந்தேன்

கிளைகளின் நுனியில் மலர்களை போலே
உன் கிளை மேலே வளர்ந்தேன்

மறைக்கின்ற பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே
விடு விடு வேகமாக விருப்பம் போல மலரட்டும்

தொட தொட தேகமெல்லாம்
தேன்துளி சுரக்குதே
தொடு தொடு வேகமாக
சுரந்து வழிந்து ஓடட்டும்

வா அருகே நான் வாசனை மரம் தானே
என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம் இருக்கு
நீ அறிவாய்

தேன் மழையால் நீ நனைத்தாய் எனயே
அட ஏதோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நான் அறியேன்

என் காதல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே
என்னை ரசித்து இம்சை செய்தது ஏண்டா

என் காதல் தாயகமே, காமன் செய்த ஆயுதமே
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது ஏண்டி?

உடல் வழி ஊர்ந்து, உயிர் வழி புகுந்து
ஆய்வுகள் செய்ய வந்தாயோ

என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து
தவம் பல செய்திட வந்தாயோ

உடல் எங்கும் ரேகை வேண்டும்
உன் நகம் வரையுமோ
விரல் படும் பாகம் எல்லாம்
வெடிக்குதே எரிமலை

வாலிப வாசமில்லை வாடிடும் பொழுதிலே
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி

ஏ புயலே, என்னை வதைக்கும் வெயிலே
இடி போலே என்னை தாக்கி முதலில் கைது செய்தாயேன்
சொல்வாய்

பூ உள்ளே நான் போரை தொடங்கிடவா
நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல வழி
நடத்து

காதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?

புது தேடல் படலமிது
தேகம் தேயும் தருணமிது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ?

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.