அப்பாம்மா வெளையாட்டை பாடல் வரிகள்

Last Updated: Feb 07, 2023

Movie Name
Padikathavan (2009) (படிக்காதவன்)
Music
Mani Sharma
Year
2009
Singers
Ranjith, Saindhavi, Snehan
Lyrics
Snehan
ஆண்: அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை

பெண்: அஞ்சாமல் என் மேல கைப்போடு கைப்போடு
செல்லம் செல்லம் செல்லம்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
எனக்கு மொத்தமாகக் கொடுத்துப்புடு பத்துப்புள்ளை
பத்துப்புள்ளை அய் அய் பத்துப்புள்ளை (அப்பாம்மா வெளையாட்டை...)

(இசை...)

ஆண்: எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு
ஏழெட்டு தொட்டில்கள் கட்டச் சொல்லு

பெண்: கடிகாரம் முள்ளெல்லாம் கழட்டச் சொல்லு
காலையில் சேவலை தூங்கச் சொல்லு

ஆண்: என்னோட சம்சாரம்... அழகான மின்சாரம்...

என்னோட சம்சாரம் அழகான மின்சாரம்
நான் தொட்டா மட்டும்தான் ஆகாது சேதாரம்

பெண்: ஆடைக்குள் மேடைப்போடு... அதிலே நீயே பாடு...
அரங்கேற்றம் செய்யும் முன்னே...
பூந்து விளையாடு... (அப்பாம்மா வெளையாட்டை...)

(இசை...)

ஆண்: காம்புக்கேத் தெரியாமல் பூவைப் பறிப்பேன்
கடலுக்கேத் தெரியாமல் உப்பு எடுப்பேன்

பெண்: சாமத்தில் உன் பக்கம் சாஞ்சுப் படுப்பேன்
சம்மதம் கேட்காமல் மேஞ்சு முடிப்பேன்

ஆண்: சாமத்து சங்கீதம்... கேட்டாலே சந்தோஷம்...
சாமத்து சங்கீதம் கேட்டாலே சந்தோஷம்
தினந்தோறும் கேட்டாலும் ஒருபோதும் சலிக்காதே

பெண்: விளையாத பொட்டல் காடு... நீயே விதையப்போடு...
பூப்பூக்கும் பூரிப்போடு..
இனிமேல் உன் பாடு... (அப்பாம்மா வெளையாட்டை...)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.