கடவுளும் காதலும் பாடல் வரிகள்

Movie Name
Padikathavan (2009) (படிக்காதவன்)
Music
Mani Sharma
Year
2009
Singers
Harini, Karthik, Snehan
Lyrics
Snehan
ஆண்: கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரைப் பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய்

பெண்: காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே ஏய் ஏய் ஏய்

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....

ஆண்: தலைகீழ் தெரியுதே வானம்
தலைமேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று
எல்லாம் காதலே (கடவுளும் காதலும்...)

(இசை...)

ஆண்: ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்

பெண்: மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்

ஆண்: நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை

பெண்: மீசையின் வன்முறை ரசித்துத்தான்
நான் கூட பார்க்கிறேன் பண்ணிசை

ஆண்: உன் மென்மையை விரும்புதே என் மனம்
போர்க்களம் புகுந்திட வேண்டாம்

பெண்: உன் வன்மையை விரும்புதே பெண்மைதான்
அகிம்சையை வாரிட வேண்டாம்

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....

ஆண்: மெல்லினம் என்பது பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை
இடையினம் என்பது மென்மை
இதுதான் உண்மையே

(இசை...)

ஆண்: முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து
இதுவரை எனை நான் பார்த்ததில்லை

பெண்: உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
இதுவரை இமைகள் மூடவில்லை

ஆண்: உன் இதழிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு

பெண்: இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு

ஆண்: நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறிப்போகிறேன் அள்ளிடு

பெண்: உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ...

ஆண்: அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அதுதான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி (கடவுளும் காதலும்...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.