ஏ நெஞ்சே என் நெஞ்சே பாடல் வரிகள்

Movie Name
April Maadhathil (2002) (ஏப்ரல் மாதத்தில்)
Music
Yuvan Shankar Raja
Year
2002
Singers
Harish Raghavendra, Sadhana Sargam
Lyrics
Snehan
படபட படவென அடிக்குது இதயம்
தடதட தடவென துடிக்குது இமைகள் 
சலசல சலவென சுழலுது விழிகள் 

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ 
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ எனதா உனதா 
எனவே எனவே 
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது ... 

ஏ நெஞ்சே என் நெஞ்சே 
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய் 
ஹே ஹே ஹே 
காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்
, ம்ம் -ம்ம்-ம்ம் ஈர்க்கும் அந்த விசையில் இன்று வீழ்ந்தேன் நான், 

மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு 
சில்லென்று மனதை தொடுதே 

என்னிலொரு மாற்றம் எதிலும் தடுமாற்றம் 
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம் 
ஓ - ஓ - யிய -யிய - யிய 
கண்ணை விட்டு வெளியே 
காணும் ஒரு கனவே 
வருந்தி அழைத்தாலும் 
இனி வாராது தூக்கம் 
வெகு நேரம் பேசி பின்பு 
விடை பெற்று போகும் நேரம் 
நாலடிகள் நடக்கும் கால்கள் 
நடை மறந்து திரும்பும் ஏனோ 
பேசாத நேரம் தானே 
பெரிதாக தோன்றும் அன்பே 
காலங்கள் தோற்கும் இங்கே ... 

நேற்று வரை கனவில்
நிலவு வரவில்லை 
அடம்பிடிக்கும் நிலவை 
இனி நான் என்று பார்ப்பேன் 

ஓ ஓ .... காதல் வரும்போது 
கனவுகளும் மாறும் 
நீ விரும்பும் நிலவை 
இனி தினம் தோறும் பார்ப்பாய் 
யார் யாரோ எழுதி சென்ற 
புரியாத கவிதை எல்லாம் 
நான் கேட்டு ரசித்தேன் இன்று 
நான் பார்த்த மரமும் இலையும் 
புது போர்வை போர்த்திக்கொண்டு 
புது பார்வை பார்த்துக்கொண்டு 
நம்மை பார்த்து சிரிகின்றதே 

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.