பொய் சொல்ல பாடல் வரிகள்

Last Updated: Feb 07, 2023

Movie Name
April Maadhathil (2002) (ஏப்ரல் மாதத்தில்)
Music
Yuvan Shankar Raja
Year
2002
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Snehan
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று ஞாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் இல்ல
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் மனம் சொல்லுமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.