அய்யய்யோ என் உசுருக்குள்ள பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Paruthiveeran (2007) (பருத்தி வீரன்)
Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Manickka Vinayagam, Shreya Ghoshal, Yuvan Shankar Raja
Lyrics
Snehan

ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே
ஒத்தப்பனை ஓரத்துல
செத்த நேரம் ஒம்மடியில்
தலை வச்சு சாஞ்சுக்கிறேன்
சங்கதியை சொல்லித் தர்றேன் வாடி நீ வாடி

பத்துக் கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவயில்லை வாடி நீ வாடி
ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே
செவ்வெளநி சின்னக் கேணி
ஒன்ன சிறை எடுக்கப் போறேன் வாணி

அய்யய்யோ என் உசுருக்குள்ள
தீயை வச்சான் அய்யய்யோ
என் மனசுக்குள்ள நோயத்
தச்சான் அய்யய்யோ.....

சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள

அய்யய்யொ என் வெட்கம்
பத்தி வேகிறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே அய்யய்யோ

அரளி வெதை வாசக்காரி
ஆளைக் கொல்லும் பாசக்காரி
என் ஒடம்பு நெஞ்சைக் கீறி நீ
உள்ளே வந்த கெட்டிக்காரி

அய்யய்யோ என் இடுப்பு வேட்டி
எறங்கிப் போச்சே அய்யய்யோ
என் மீசை முறுக்கும்
மடங்கிப் போச்சே அய்யய்யோ

கல்லுக்குள்ள தேரை போல
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நெழலைப் போல
பொட்டைக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…ஓ…

அய்யனாரைப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா
நான் வாடாமல்லி நீ போடா அல்லி

தொரட்டிக் கண்ணு கருவாச்சியே நீ
தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.