சரிகமபதநி சொல்லித்தர்றேன் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Paruthiveeran (2007) (பருத்தி வீரன்)
Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Srimathumitha, 'Madurai' S. Saroja, Ameer Sultan
Lyrics
Snehan
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி
கொடுக்காப்புளிய பறிச்சு நான் துவையல் அரைச்சுத்தாரேன்
கள்ளிப்பாலைக் கறந்து நான் காப்பி போட்டுத்தாரேன்
குடிச்சா நாக்குலயும் எசை வரும் நாதஸ்வரம் தேவயில்லை
ராகங்களைக் கத்துத்தாரேன் தட்சணையும் தேவயில்லை

பொழப்புக்கெட்ட சிறுக்கிக்கு புருஷன் பத்து பாருங்கடி
தாம்புச்சங்கிலி போட்டாத்தேன் நக்கலும் விக்கலும் அடங்கும்டி
எளரத்தம் எகிறிகுதிக்குதோ அடிபோடி
நாங்களெல்லாம் போடாத ஆட்டங்களா சும்மா போடி

ஏகப்பட்ட சரக்கிருக்கு வாய்வசந்தான் எங்கிட்டே
வாங்கி நல்லா ஏத்திக்கிற காதிருக்கா உங்கிட்டே
தண்டட்டி ரெண்டும் பத்திரம்டி மம்பட்டிக்காரன் வாரான்டி
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி
சரிகரிச...
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி

கழுவத்தேவன் மகளுக்கு புத்தியுங்கித்தியும் கெட்டுப்போச்சோ
ஏ கெழவி
யாரு போறவ வாரவளெல்லாம் புடிச்சு
பாட்டுப்பாடி காமிச்சுகிட்டு இருக்கா
பொட்டல்ல உக்காந்துகிட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.