மலர்களே மலர வேண்டாம் பாடல் வரிகள்

Movie Name
Pudhukottaiyilirundhu Saravanan (2004) (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்)
Music
Yuvan Shankar Raja
Year
2004
Singers
Bombay Jayashree
Lyrics
Thamarai
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்.
தென்றல் தோழனை அழைத்து வந்து
திணை விருந்து கொடுத்து விட்டு,
வம்பு செய்திகளை சுவைத்துகொண்டு, சிரித்து முறைத்து விருப்பம் போல வாழும்,

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்.

ஆடைகள் சுமை தானே
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்
யார் யேனும் பார்பார்கள் என்று
கவலை ஏதும் இன்றி கழித்தேன்
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிரதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் எனை பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்
புதிய பல பறவை கூட்டம் வானில்,
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞான நிலை

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.