அலையாடும் போலே பாடல் வரிகள்

Last Updated: Jul 11, 2026

Movie Name
Kumari (1952) (குமாரி)
Music
K. V. Mahadevan
Year
1952
Singers
P. Leela
Lyrics

அலையாடும் போலே மன நிலையாடலானேன்
அனாதை நான் தனியே வாடலானேன்
அனலிட்ட மெழுகு போல் உருகுறேனே வாழ்விலே
கனிந்து அன்பே காட்டவாரும் காணேன் (அலையாடும்)

என்னாசை அன்றே மாய்ந்ததே
இன்பம் தோன்றி மறைந்ததே
இன்னல் ஏனோ இனியும் பாரிலே
அலையாடும் போலே மன நிலையாடலானேன்..

நீதி பொழியும் நாட்டில் சாந்தி
நேர்மை முறையும் இல்லையா
மயங்கும் எந்தன் துன்பம் தீராதா அன்பும் நேராதா
அலையாடும் போலே மன நிலையாடலானேன்..