காதலின் சோலை கனியை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Kumari (1952) (குமாரி)
Music
K. V. Mahadevan
Year
1952
Singers
A. M. Rajah
Lyrics

இருளிலே நிலவொளி போல்
அருகிலே அவர் வருவார்
மாறிடாத பிரேம ரூப ராஜன்
மனதிலே கோயில் கொண்ட நேசன் (இருளிலே)

வரும் அவரிடம் வாஞ்சையாகவே
வகையுடன் சுவையோடு பேசுவேன்
விரும்பிடும் அவர் எண்ணம் போலவே
விளங்கு மெய்காதல் வாழ்க்கை நாடுவேன் (இருளிலே)

காதலின் சோலை கனியை இவ்வேளை
காணவே கண்கள் ரெண்டும் எதிர்பார்க்குதே
உள்ளம் வரவேற்குதே ஓடிடும் மானினம் போலே
ஊடுருவிடும் விழியாலே..

உண்மை உறவாகினாள்
அன்பின் உயர்வாகினாள்
எந்தன் உயிராகினாள்
இன்ப ஊற்றினிலே பொங்கும் காற்றினிலே (காதலின்)

ஹஹாஹ் அழகின் ராணி
யாரெனக்கே இணையாவார்
ஆருயிர் வாலிபன் முன்னே
ஆடுவேன் பாடுவேன்
வலை வீசிடுவேன் வசமாக்கிடவே........