Song lyrics

Naan Raani Lyrics

நான் ராணி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Chitragupta
Year
1958
Singers
Jikki
Naan Raani

Lyrics

Naan Raani Lyrics

நான் ராணி....ஆஹா.....அன்பே நீ ஓஹோ...
மோகம் ஆனேன் உன்மேல் மையல்
பார் நீ என் வேல் கண்ணின் செயல்
நான் ராணி....ஆஹா.....அன்பே நீ ஓஹோ...

அங்க அசைவை கண்ணில் காண் நீ
அழகை ரசிக்க மெல்லவா நீ
அன்பாகியே கண் தேடுதே
கண் தேடுதே மன்றாடுதே
உன் மீது ஆசைக் கடல் (நான் ராணி)

பெட்டியில் ஆடும் பாம்பு போலே
பேச்சிலே மயங்கி ஆடும் ஆளே ஆஹாஹ்
வண்டாகவா...செண்டாகி நான்
கொண்டாடுவேன் ஒன்றாகலாம்
கொவ்வை இந்தக் கோதை இதழ் (நான்)

சோலைக் கரும்பு மேனி மாது
காலங் கடந்தாலே கிடைக்காது ஆஹாஹ்
அஞ்சாதே நீ ஓய்யாரனே
கொய்யாக் கனி உன் காதல் பெண்
என் மேனி தானே எழில்.......(நான் ராணி)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people