Song lyrics

Anbenum Peroli Lyrics

அன்பெனும் பேரொளி பாடல் வரிகள்

Last updated Oct 30, 2026

Music
Sean Roldan
Year
2026
Singers
Meenakshi Elayaraja, Sean Roldan
Lyricist
Yugabharathi

Lyrics

Anbenum Peroli Lyrics

ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள் (2)

கொடுப்பதற்கே மனம் இருந்தால் போதும்
மறைப்பதற்கே எதுவும் இல்லை மீதம்
காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம் (2)

அன்பெனும் பேரொளி (4)

ஒரு உயிரின் பசி அறிந்தால்
உறங்கிடுமோ தெய்வம்
ஒளி பரவும் மனதினிலே
அகப்படுமே மெய்யும்

தடையங்களை பதித்திடவே
பறவைகளை எண்ணும்
தனை மறந்து கொடை அளித்தால்
தலைமுறையே சொல்லும்

வான் அளந்த நேயம்
ஆவதில்லை காயம்
காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்

ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்

அன்பெனும் பேரொளி

ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்

கொடுப்பதற்கே மனம் இருந்தால் போதும்
மறைப்பதற்கே எதுவும் இல்லை மீதம்
காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம் (2)

அன்பெனும் பேரொளி (4)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people