பட்டுக் கண்ணே செல்ல பாடல் வரிகள்

Movie Name
Naan Yen Pirandhen (1972) (நான் ஏன் பிறந்தேன்)
Music
Shankar-Ganesh
Year
1972
Singers
T. M. Soundararajan
Lyrics
பட்டுக் கண்ணே செல்ல பாப்பா
நல்ல தம்பி, வெல்லக் கட்டி சுட்டி பையா
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
நான் சொல்லும் கதை பாட்டு

தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு

ஒரு மேதை பகல் வேளை
கையில் விளக்குடன் சென்றாராம்
ஒரு மேதை பகல் வேளை
கையில் விளக்குடன் சென்றாராம்
மனிதன் எங்கே...
மனிதன் எங்கே காணவில்லை
தேடுகிறேன் நான் என்றாராம்
பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்

தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு


கையிரண்டு காலிரண்டு
கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
கையிரண்டு காலிரண்டு
கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
இதயம் மட்டும் ஒன்று வைத்தான்
சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்
தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே

தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.