Song lyrics

Uyire Uyire Lyrics

உயிரே உயிரே பாடல் வரிகள்

Last updated Oct 19, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2026
Singers
Aditi Bhavaraju
Lyricist
Balaji Venugopal

Lyrics

Uyire Uyire Lyrics

உயிரே உயிரே உடையாதிரு நீ
உருகும் பனியே நதியாகிடு நீ
தொடரும் கதையே தொலையாதிரு நீ
விலகும் இருளே விடையாகு நீ

உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லுமா
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார்வென்றது விதி வெல்லுமா ஆஆ

வானை விட்டு சூரியன் நீங்கிடுமோ ஆஹ் ஆஹ்
விண்மீன் ஒன்று அறியாமல் ஏங்குதம்மா ஆஹ் ஆஹ்

என் மனது ஏன் முதலில் தடுமாறுது
தடுமாறுது நேரம் வர தெளிவாகுது
தரை தென்படு பொழுதாகுது
ஓரிடத்தில் மேகங்களும் உருவாகுது உருமாறுது
மழையாய் அது விழுகுது பயிர் வாழ்ந்திட தானே

மழை போல தான் சிலர் வாழ்விங்கே
மனம் ஆற ஊர் வாழ ஓடோடி வருமே
காலங்களும் தூரங்களும்
கடந்தாலும் பேரன்பு உன்னைத் தொடுமே

உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லுமா
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார்வென்றது விதி வெல்லுமா ஆஆ

வானை விட்டு சூரியன் நீங்கிடுமோ ஆஹ் ஆஹ்
விண்மீன் ஒன்று அறியாமல் ஏங்குதம்மா ஆஹ் ஆஹ்

உயிரே உயிரே உடையாதிரு நீ
உருகும் பனியே நதியாகிடு நீ
தொடரும் கதையே தொலையாதிரு நீ
விலகும் இருளே விடையாகு நீ

உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லுமா
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார்வென்றது விதி வெல்லுமா ஆஆ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people