வா என் தலைவா பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Sachein (2005) (சச்சின்)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Shankar Mahadevan
Lyrics
ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
ஒருதடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது
தினசரி நீ ஜெயித்துவிடு திசைகளும் உன்னோடு
அடிபணியாதே வளையாதே ஏறு ஏறு ஏறு முன்னேறு

ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா

ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம் புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு
ஏய் கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம்
ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு
ஏய் விடியலுக்கு விண்வெளி தான் விளம்பரம் செய்யாது
விருதுகளை விலை கொடுத்து வாங்கிட கூடாது
எது முடியாது எது கிடையாது மோதி மோதி மோதி போராடு

ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா

வாழ்க்கை இந்த வாழ்க்கை அதை கவிதை புத்தகம் போல் வாசி
அட கடைசி பக்கம் வரை நேசி
ஹே உலகம் அடடா இந்த உலகம் இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி
மணம் நிறைய நிறைய உல்லாசி
ஹே தங்கமழை கேட்காதே உழைத்து ஒரு குடை வாங்கு
அட தடைகளுக்கு அஞ்சாதே உடைத்திட புலியாகு
துளையிட்டால் தான் சுட்டால்தான் மூங்கில் கூட பாடும் குழலாகும்

ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ ஹோய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.