கண்மூடி திறக்கும் பாடல் வரிகள்

Movie Name
Sachein (2005) (சச்சின்)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Devi Sri Prasad
Lyrics
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்

ஓஹோ ஓஓ..

உன் பெயரும் தெரியாத
உன் ஊரும் தெரியாத
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமகின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் எடையை
உணர்கின்றேன் காதல் இதுவா

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே
நதி ஓடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
பட் என்று சரிந்தது இன்று ஒஹ்

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே

ஓஹோ ஓஓ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.