கூட்டாளி கூட்டாளி பாடல் வரிகள்

Movie Name
Aaha Kalyanam (2014) (ஆஹா கல்யாணம்)
Music
Dharan Kumar
Year
2014
Singers
Benny Dayal
Lyrics
Madhan Karky
அடுத்து என்ன செய்ய அடுத்து எங்க போக
அதுக்கு ஏங்கி ஏங்கி வாழும் அந்த வாழ்க்கை என்ன வாழ்க்கை
காத்த தேடி நானும் போனதில்ல
என்ன தேடி வந்த காத்த போல வேணும் அந்த வாழ்க்கை
என் வாழ்க்கை பந்த போல தட்ட போறேன்
என் வாழ்க்கை கேக்க போல வெட்ட போறேன்
என் வாழ்க்கை மூவி போல காட்ட போறேன்
அத சூப்பர் ஹிட் ஆக்க போறேன்
கூட்டாளி கூட்டாளி யார் பேச்சும் கேக்க வேணாம்
உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு
அம்மாவும் அப்பாவும் உன் வாழ்க்க வாழ வேணாம்
உன் வாழ்க்க நீயே வாழு

பலூனில் நூலை கட்டும் குழந்தை போல
என் வாழ்க்கை ஒன்றை நான் கட்டுகின்றேன்
பலூனை முட்டும் குட்டி நாயை போல
என் வாழ்க்கை மேல நான் மோத போறேன்
நேர் கோட்டில் போகும் ஓர் ஒளி கீற்றை போல
என் வாழ்க்கை ஒன்றை நான் வரைவேன் வரைவேன்
காத்தோட போக்கில் ஓர் வாசத்த போல
என் வாழ்க்கை போக பார்ப்பேன்
கூட்டாளி கூட்டாளி யார் பேச்சும் கேக்க வேணாம்
உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு
அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்கை வாழ வேணாம்
உன் வாழ்க்க நீயே வாழு

அடுத்து எங்க செல்ல அடுத்து என்ன வெல்ல
விழிகள் அங்கும் இங்கும் தேடி ஓட வாழ்க்கை என்ன வாழ்க்கை
காத்திருந்தால் காலம் நிற்பதில்லை
அந்த வெற்றி தேடி ஓடும் நெஞ்சில் காதல் தேவை இல்லை
என் வாழ்க்கை பந்த போல தட்ட போறேன்
என் வாழ்க்கை கேக்க போல வெட்ட போறேன்
என் வாழ்க்கை மூவி போல காட்ட போறேன்
அத சூப்பர் ஹிட் ஆக்க போறேன்
கூட்டாளி கூட்டாளி யார் பேச்சும் கேக்க வேணாம்
உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு
அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம்
உன் வாழ்க்க நீயே வாழு
கூட்டாளி கூட்டாளி யார் பேச்சும் கேக்க வேணாம்
உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு
அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம்
உன் வாழ்க்க நீயே வாழு
ஓ நீயே வாழு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.