ஏன் இங்கு வந்தான் பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Meaghamann (2014) (மீகாமன்)
Music
S. Thaman
Year
2014
Singers
Pooja Vaidyanath
Lyrics
Madhan Karky
ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொனேன்
என்னுள்ளே சென்றான்

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிரகங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றாய் ஊ ஊ ஹோ
காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்

ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான் பேசாதே என்றான்
செல் என்று சொனனேன் செல் என்று சொனனேன்
என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான்

என் அழகை ரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இடையின் சரிவிலே மழை துளியென உருள்கின்றான்
என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தில் மெதுவாய் சுவைதான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்

விடிய விடிய இரவினை வடிதேன்
குடிக்க செய்தானே
கொடிய கொடிய வழிகளை கூட
வெடிக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொனனேன்
என்னுள்ளே சென்றான்

நான் ஒளியில் நடக்கிறேன்
என் நிழலை தொடர்கிறான்
என் விளக்கை அணைக்கிறேன்
என் இருலெனா படர்கின்றான்
முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை என்றேன்
வரை அரை இன்றி எனை அவன் சிறை பிடித்தான்

சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்க செய்தானே
கனவும் நெனவும் தொடும் ஒரு எடத்தில்
இருக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொனேன்
என்னுள்ளே சென்றான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.