நான் உன்னை தினமும் பாடல் வரிகள்

Movie Name
India Pakistan (2015) (இந்தியா பாகிஸ்தான்)
Music
Deena Devarajan
Year
2015
Singers
Swetha Mohan
Lyrics
நான் உன்னை தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்

என்னோடு உன்னை பற்றி தினமும் பேசினேன்
உன் முன்னே உள்ளதினை மறைக்கிறேன்

நீ இல்லா உலகத்தை நினைத்து பார்க்கிறேன்
எங்கெங்கும் இருட்டினை உணர்கிறேன்

நான் உன்னை தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்

நங்கூரமே நீ போட்டு ஏன்
நீங்காமல் என் நெஞ்சில் பாய்ந்தாய்

ரங்கோலியின் வண்ணங்களை
கண்ணீரில் ஏன் தூவினாய்

நான் பயணம் போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்க்கிறாய்

உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்

நான் உனை தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்

சூறாவழி காற்றாகவே உன் நியாபகம்
சுழற்றி அடிக்கும்

தீரா வலி ஒன்றோடு தான்
என் காதலும் வாழ்ந்திடும்

என் பெயரை யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்

நம் பெயரை ஒன்று சேர்க்கவே
உன்னை நானும் கேட்க்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.