Song lyrics

Vaanam Idi Idikka Lyrics

வானம் இடி இடிக்க பாடல் வரிகள்

Last updated Nov 02, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubrahmanyam
Lyricist
Gangai Amaran
Vaanam Idi Idikka

Video

Vaanam Idi Idikka

Lyrics

Vaanam Idi Idikka Lyrics

ஆண் : வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்
பெண் : வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா எனக்கது கெடச்சதம்மா
என்னம்மா சொல்லம்மா கண்ணம்மா கையத் தொட்டு
பெண் : நெனச்சது பலிச்சதய்யா எனக்கது கெடச்சதய்யா
என்னய்யா சொல்லய்யா கண்ணம்மா கையத் தொட்டு

ஆண் & பெண் : வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்

பெண் : சின்னச் சின்ன ஆசை என்னத் தொட்டுப் பேச
கன்னி மனம் கூச அங்கு காதல் வாசம் வீச
இது காமன் போட்ட பூஜை
ஆண் : மொட்டு மல்லி மாலை கட்டி வெச்ச வேளை
பட்டுக் கூறைச் சேலை தொட்டுக் கட்டிப் பார்க்கும் சோலை
மேளம் கொட்டிப் பாடும் வேளை
பெண் : ஆளான அழகான கொடி தான் ஐயா
அதில் பூத்த புதுப் பூவில் தேன் தான் ஐயா
ஆண் : தேன் அள்ளி நான் உண்ணத் திரை ஏனம்மா
திரளான சுகம் காட்டும் கரை நானம்மா
பெண் : வெக்கமா சொர்க்கமா விட்டு விட்டுச் செல்லுமா
பக்கமா வந்து தான் மொத்தமா பலன் தரும்

ஆண் & பெண் : வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்

ஆண் : பொன்மணி பூட்டிப் பூவிலங்கு சூட்டி
கன்னி வரும் நேரம் அப்போ தன்னால் தீரும் பாரம்
அதன் பின்னால் போதை ஏறும்
பெண் : கட்டிலுக்கு மேலே இரட்டைக் கிளி போலே
ஒட்டி நின்னு பாடும் இளம் வட்டம் மோகம் தேடும்
அதில் சொர்க்கம் நேரில் கூடும்
ஆண் : வாழ்நாளில் நினைக்காத புது நாள் இது
தானாகக் கலையாத கலை தான் இது
பெண் : தேனோட தினையாக இணையானது
மார்போடு மானாகத் துணையானது
ஆண் : எண்ணம் தான் துள்ளுது என்னமோ சொல்லுது
கண்ணம்மா வண்ணம்மா இன்பமாய் பொங்கி வரும்

ஆண் & பெண் : வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people